×

திருமழிசை பெருமாள், ஆழ்வார் திருக்கோயில்களில் நாளை முதல் மகோற்சவ விழா: 10 நாட்கள் நடைபெறுகிறது

திருவள்ளூர், ஜன. 18: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் ஜெகந்நாதப் பெருமாள் மற்றும் பக்திஸாரர் எனும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில்களில் நாளை முதல் வரும் 28ம் தேதி வரை 10 நாட்களுக்கு மகோற்சவ விழா நடைபெறுகிறது.அதன்படி முதல் நாளான நாளை காலை உற்சவம் பல்லக்கிலும், மாலை உற்சவம் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2ம் நாளான 20ம் தேதி காலை உற்சவம் பெரியமங்களகிரியிலும், மாலை உற்சவம் யாளி வாகனத்திலும், 3ம் நாளான 21ம் தேதி காலை உற்சவம் சூரிய பிரபையும், மாலை உற்சவம் சந்திரபிரபையும், 4ம் நாளான 22ம் தேதி காலை உற்சவம் பல்லக்கிலும், மாலை உற்சவம் விமானத்திலும், 5ம் நாளான 23ம் தேதி காலை பல்லக்கிலும், மாலை உற்சவம் ஜெகந்நாதப் பெருமாளுக்கு கருட சேவையும், திருமழிசை ஆழ்வாருக்கு ஹம்ச வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து 6ம் நாளான 24ம் தேதி காலை உற்சவம் ஜெகந்நாதப் பெருமாள் சேஷ வாகனத்திலும், திருமழிசை ஆழ்வார் தங்கதோளுக்கினியான் வாகனத்திலும், மாலை உற்சவம் குதிரை வாகனத்திலும், 7ம் நாளான 25ம் தேதி காலை உற்சவம் தங்க பல்லக்கு சூர்ணாபிஷேகத்திலும், மாலை உற்சவம் தோளுக்கினியான் வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர். 8ம் நாளான 26ம் தேதி காலை உற்சவம் பல்லக்கு நாச்சியார் திருகோலம் ஏழூர் புறப்பாடு நிகழ்ச்சியும், மாலை உற்சவம் எண்ணெய் காப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 9ம் நாளான 27ம் தேதி காலை உற்சவம் திருத்தேர் நிகழ்ச்சியும், மாலை தோட்ட உற்சவம் மாட வீதியிலும் நடைபெறுகிறது. 10ம் நாளான 28ம் தேதி காலை உற்சவம் சாற்று முறை உற்சவமும், மாலை உற்சவம் திருச்சந்த விருத்த சாற்றுமுறை நிகழ்ச்சியும், தோட்ட உற்சவம் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு உற்சவம் தோட்ட உற்சவம் உள்மாடவீதியிலும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கவெனிதா, செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post திருமழிசை பெருமாள், ஆழ்வார் திருக்கோயில்களில் நாளை முதல் மகோற்சவ விழா: 10 நாட்கள் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Makotsava festival ,Tirumazhisai Perumal ,Alwar ,Tiruvallur ,Thirumashisai Azhwar temple ,Thirumashisai ,Poontamalli ,Jagannath Perumal ,Bhaktisarar ,Mahakotsava festival ,
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்